சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மன நலம் மற்றும் பள்ளிக்கல்வி உளவியல் வளர்ச்சிக்கு நரம்பியல் வழிகாட்டுதல்: APSPA 2025 ஜப்பானில் பேராசிரியர் பிரகாஷ் பாபு உரை
இடுகை இடப்பட்ட நாள்:
22 SEP 2025 5:05PM by PIB Chennai

ஆசியா பசிபிக் பள்ளிக்கல்வி உளவியல் கழகத்தின் 8-வது APSPA உலக மாநாடு ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
மாநாட்டு தொடக்கவிழாவில் புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு சிறப்பு உரையாற்றினார்.
மாநாட்டில், துணைவேந்தர் பிரகாஷ் பாபு “நான் ஜப்பானில் வசித்த அனுபவமுள்ளது; இங்குள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விமுறை, நடத்தை பற்றிய முழுமையான அறிவு எனக்கு உள்ளது” என்று கூறினார். ஜப்பானில் இந்த கருத்தரங்கம் நடைபெறுவது மிகை சிறப்பாகும் என்றார். இந்தியா, ஜப்பான் போன்ற வளரும் நாடுகளில் பள்ளிக்கல்வி உளவியல் மாநாடுகள், மாற்றமடைந்த கல்வி சூழலை எதிர்கொள்ளும் பிரதான நடைமுறைகளை வகுக்க மிகவும் அவசியம் என்றும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இதை முன்னுரிமையாக போதிக்க வேண்டியது என்றும் அவர் வலியுறுத்தினார்.
டோக்கியோ பல்கலைக்கழகத் தலைவரும், இந்திய-ஜப்பான் உறவு செயலருமாகிய பேராசிரியர்கள் மற்றும் குழுவினர், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பேராசிரியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இதே போல், புதுவை பல்கலைக்கழகதை சார்ந்த பேராசிரியர் மு. கருணாநிதி, பேராசிரியர் பழனிவேலு, பேராசிரியர் லட்சுமி, சமுதாய கல்லூரி பேராசிரியர் அரங்கமுருகயன் உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரைகளை வழங்கினர்
டோக்கியோ பல்கலைக்கழக துணைவேந்தர் ஜிரோ சகாய், இந்திய-ஜப்பான் உறவு செயலர் டாக்டர் உமேஷ், APSPA தலைவரும் மாநாடு அமைப்பாளர் டாக்டர் பஞ்ச் இராமலிங்கம், ஜெர்மன் மாவை தங்கு ராஜா, அமிர்த பகிரதன் (லண்டன்), டாக்டர் ஜெயச்சந்திரன் (மொரிசியஸ்) உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
AD/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2169713)
வருகையாளர் எண்ணிக்கை : 28