சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

2025-26-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு

Posted On: 19 SEP 2025 9:27PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழகம் நடப்புக் கல்வியாண்டில் 3 இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் 33 முதுகலை பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தனி நுழைவுத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த நுழைவுத் தேர்வுகள் காரைக்காலில் உள்ள இப்பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திலும் (அந்தமான் & நிக்கோபார்) போர்ட் ப்ளேயரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த விரிவான அறிக்கையை அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ளார்.

***

(Release ID: 2168449)

AD/SV/KPG/RJ


(Release ID: 2168954)
Read this release in: English