சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, வடிவமைப்புக்கான நிகழ்ச்சி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2025 8:45PM by PIB Chennai

தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு குறித்த சக்திவாய்ந்த கலந்துரையாடலுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சர்வதேச அளவிலான தளமாக அமைந்துள்ளது. இது போன்ற நிகழ்ச்சிகள்  பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து பரஸ்பரம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதிலும், ஆலோசனைகளை பெறுவதற்கும் உதவுகின்றன.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட  இயக்குநரும் பேராசிரியருமான பேராசிரியர் கே. தரணிக்கரசு மற்றும் கௌரவ விருந்தினராக பங்கேற்ற இணை இயக்குநர் (சந்தைப்படுத்தல்) திரு மோஹித் குப்தா ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய பேராசிரியர் தரணிக்கரசு, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக இதுபோன்ற ஒரு மதிப்புமிக்க தளம் நடத்தப்படுவது பெருமை அளிப்பதாக கூறினார்அறிவுசார் அமைப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு மற்றும் வடிவமைப்பு போன்ற துறைகளில் உள்ள ஆற்றல்களை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்துவது குறித்து அறிந்து கொள்ள உதவிடும் என்றும் கூறினார்.

***

AD/SV/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2168902) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English