சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அஞ்சல் துறை குறைதீர்ப்பு முகாம் இம்மாதம் 25-ம் தேதி நடைபெறவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2025 2:36PM by PIB Chennai

அஞ்சலக  சேவைகள் குறித்த குறைதீர்ப்பு முகாம் இம்மாதம் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட புகாரில், அது  தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்ட தேதி, நேரம், அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்). துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு போன்றவை சம்பந்தமான புகாராக இருந்தால், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி

"அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்"

முதன்மை அஞ்சல் அதிகாரி

அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் சென்னை 600 002.

முகாம் நடைபெறும் இடம்: அண்ணா சாலை தலைமை தபால் நிலையம்,600 002.

புகார்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி 23.09.2025 ஆகும்.

தபால் உறையின் மீது முன்பக்கத்தின் மேல் பகுதியில் "அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

***

AD/SV/KPG/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2168890) வருகையாளர் எண்ணிக்கை : 4