சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை கே கே நகர் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம்’ இயக்கம் தொடங்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 19 SEP 2025 12:50PM by PIB Chennai

 

சென்னை கே கே நகரில் உள்ள தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐசி) மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம் என்ற மத்திய அரசின் முதன்மையான திட்டம்  தொடங்கப்பட்டுள்ளது. இதனை 2025 செப்டம்பர் 17 அன்று இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் சௌமியா சம்பத் தொடங்கிவைத்தார். தேசிய அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்த இந்தத் திட்டத்தின் நேரடி ஒளிபரப்புடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2 வார காலத்திற்கான திட்ட செயல்பாடுகளை டாக்டர் சௌமியா சம்பத் தொடங்கிவைத்தார்.

கலந்துரையாடல் அமர்வுகள் மூலம் ஊட்டச்சத்து, உணவுப்பாதுகாப்பு, மாதவிடாய் தூய்மை, நோய்தடுப்பு சுகாதார நடைமுறைகள் போன்றவற்றில் விழிப்புணர்வை உருவாக்குவதில் மண்டல உணவுப் பாதுகாப்பு அலுவலர் திரு சுந்தரமூர்த்தியும், அவரது குழுவினரும் பங்களிப்பு செய்தனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அடையாறில் ரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

2025 அக்டோபர் 02 வரை தொடரவுள்ள இந்த இயக்கத்தின் போது குடியிருப்பு பகுதிகளிலும், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளிலும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுவதோடு இல்லந்தோறும் சென்று நோய் கண்டறியும் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

***

SS/SMB/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2168452) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English