நிதி அமைச்சகம்
அலுவலகங்களில் தூய்மையை பராமரிப்பதை உறுதிசெய்வதற்கான தூய்மை பிரச்சார இயக்கம் 5.0
प्रविष्टि तिथि:
17 SEP 2025 2:42PM by PIB Chennai
அலுவலகங்களில் கோப்புகள் பராமரிப்பு, இடவசதி மேலாண்மை, மின்னணு கழிவுகளை அகற்றுவது, நிலுவையில் உள்ள செயல்பாடுகளை குறைப்பது போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் தூய்மை இயக்கம் 5.0 தொடங்கப்படவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி அன்று தொடங்கவுள்ள இந்த சிறப்பு தூய்மை பிரச்சார இயக்கம் அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும். இந்த சிறப்பு தூய்மை பிரச்சார இயக்கத்தில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் முழுவீச்சில் ஈடுபடவுள்ளது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற சிறப்பு தூய்மை பிரச்சார இயக்கத்தில் நிலுவையில் உள்ள செயல்பாடுகளுக்கு விரைந்து தீர்வு காண்பதில் இந்த வாரியம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாடு முழுவதிலும் உள்ள அதன் அலுவலகங்களில் தூய்மை பராமரிப்புக்கான பணிகள் அர்ப்பணிப்புடன் செயல்படுத்தப்பட்டது. பணிபுரியும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தூய்மையை பராமரிப்பதிலும், அலுவலகங்களில் ஆவணங்களை பாதுகாப்பதிலும் கோப்புகளை பராமரிப்பதிலும், கழிவுகளை அகற்றுவதிலும் மற்றும் இடவசதியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.
அனைவரும் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக அனைத்து நிலைகளிலும் தூய்மை பராமரிப்பு நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இதேபோல் இந்த ஆண்டு நடைபெறும் சிறப்பு தூய்மை பிரச்சார இயக்கத்தை சிறப்பான முறையில் மேற்கொள்ள துறைசார்ந்த அதிகாரிகள் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட கால அளவிற்குள் பணிகளை நிறைவேற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் அலுவலக பணியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள்.
***
(Release ID: 2167541)
SS/SV/AG/KR
(रिलीज़ आईडी: 2167654)
आगंतुक पटल : 23