ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
புதுதில்லியில் நடைபெறும் மருத்துவ தொழில்நுட்ப அமைப்பின் மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார்
Posted On:
16 SEP 2025 2:54PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று தொடங்கிய 11-வது ஆசிய பசிபிக் மருத்துவ தொழில்நுட்ப அமைப்பு 2025-ல் காணொலிக்காட்சி மூலம் மத்திய சுகாதாரம் மற்றம் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா உரையாற்றினார்.
இந்த அமைப்பின் மையப்பொருளும் நிகழ்ச்சிநிரலும் வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நெருக்கமாக உள்ளன என்று அவர் தொடக்க உரையில் குறிப்பிட்டார் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மருத்துவ தொழில்நுட்ப துறையில் உத்திகளை வடிவமைக்கும். புதிய வாய்ப்புகளை உருவாக்கும் மருத்துவ தொழில்நுட்பத்திற்கு உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் இயக்கத்தை வலுப்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுபிரியா படேல் வணிகத்தை எளிதாக்கவும், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவாக்கவும் தேசிய மருத்துவ சாதனங்கள். மேம்பாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். மருத்துவ சாதனங்கள் உற்பத்தி துறையில் 100 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடு உள்ளிட்ட முதலீட்டாளர்களுக்கு உகந்த அரசின் கொள்கைகளையும், ஏற்றுமதி கவுன்சில் மேம்பாட்டு முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார் உருவாக்கம் போன்ற இரண்டு நாட்கள் (செப்டம்பர் 16:17) நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பத்துக்கும் அதிகமான உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை தலைவர்கள் முறைப்படுத்துநர் சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கொள்கை வகுப்பாளர்கள்.
***
SS/SMB/RJ/KR/SH
(Release ID: 2167347)
Visitor Counter : 2