சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மரில் ஆயுர்வேதம் & அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவக்கல்வி அறிமுகம் செய்வதாக வரும் செய்திகள் தவறானவை: ஜிப்மர் விளக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2025 8:23PM by PIB Chennai

கடந்த சில வாரங்களில் ஜிப்மர் ஆயுர்வேத மருத்துவத்துடன் ஒருங்கிணைந்த அலோபதி மருத்துவ கல்வியை அறிமுகப்படுத்த போவதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன.

இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் இந்த ஒருங்கிணைந்த கல்வி முறையை கொண்டு வர எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இது குறித்த அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் ஜிப்மர் சார்பில் பகிரவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஊடக நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் ஜிப்மர் சார்பாக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே கருத்தில் எடுத்து கொள்ள வேண்டுமென்றும் ஜிப்மர் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

***

AD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2166390) வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க: English