சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 200 பி.டெக் மாணவர்களுக்கு மருத்துவ முதலுதவி பயிலரங்கு ஜிப்மரில் நடைபெற்றது

Posted On: 12 SEP 2025 6:25PM by PIB Chennai

ஜிப்மரின் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த கல்வி ஆண்டில் புதிதாக சேர்ந்த 200 பி டெக் தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கு இதய நுரையீரலுக்கு புத்துயிர்ப்பு தருவதற்கு சிபிஆர் எனப்படும் மருத்துவ முதலுதவி சிகிச்சை பயிலரங்கை நடத்தியது.

ஜிப்மரின் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு மாணவர்களுக்கு இந்த பயிற்ச்சியை செயல்முறை விளக்கங்களுடன் அளித்தனர்.

இந்த பயிலரங்கை முன்னின்று நடத்திய ஜிப்மரின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர் மனு அய்யன் “இளம் தலைமுறையினருக்கு முதலுதவி, அவசரகாலங்களில் தேவையான செயல்பாட்டுதிறன், பேரிடர் சூழல்களில் திறம்பட செயல்படும் திறன் ஆகியவற்றை பயிற்சியாக அளிப்பதை ஜிப்மர் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ளது" என்று கூறினார். இதன் மூலம் சமுதாயத்தின் பொறுப்பு, அவசரகாலங்களில் தயார்நிலை, மீள்தன்மை ஆகியவற்றிற்கு ஜிப்மர் ஒரு வழிகாட்டும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

                                                                                                

                     

                                                                                                  

 

                                                                                                

---

AD/SMB/KPG/KR/SH


(Release ID: 2166084) Visitor Counter : 2
Read this release in: English