சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

திருச்சியில் உள்ள என்ஐடி வளாகத்தில் பி.ஐ.எஸ் மையம் மற்றும் பி.ஐ.எஸ் மாணவர் மன்றம் தொடக்கம்

Posted On: 11 SEP 2025 6:55PM by PIB Chennai

மத்திய அரசின் நுகர்வோர் நலன்உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய அமைவனம்கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் முன்முயற்சியில் என்ஐடி  திருச்சிராப்பள்ளி வளாகத்தில் பி.ஐ.எஸ் மையம்  மற்றும் பி.ஐ.எஸ் மாணவர் மன்றம்  தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பிஐஎஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர்திரு பிரமோத் குமார் திவாரிபிஐஎஸ் மையம் மாணவர் மன்றத்தையும் தொடங்கி வைத்தார். இதில் பிஐஎஸ் மற்றும் என்ஐடி திருச்சிராப்பள்ளியின் மூத்த அலுவலர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.

என்ஐடி திருச்சிராப்பள்ளி நூலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில்தரநிர்ணயம் குறித்த தகவல்களை  அறிந்து கொள்ள முக்கியத் தளமாக செயல்படும். இம்மையத்தில்மாணவர்களும் ஆசிரியர்களும் இந்திய தர நிர்ணயம்காணொளி குறிப்புகள்தொழில்நுட்ப நூல்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொண்டு தரநிலை சார்ந்த பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம் குறித்து விரிவாக அறிந்து கொள்ள முடியும். 

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிஐஎஸ் அமைவனத்தின்  தலைமை இயக்குநர் திரு பிரமோத் குமார் திவாரிதரநிர்ணயம் செய்வதில் இளம் பொறியாளர்கள் பணி அமர்த்தப்பட வேண்டியதன்  அவசியத்தை வலியுறுத்தினார். தரநிர்ணயம் என்பது நம்பிக்கைபோட்டித் திறன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நடைமுறையாகும் என்று அவர் கூறினார்.

                                                                                                            

                                                                                                             

 

                                                                                                             

                                                                                                          

                                                                                                             

                     ***

AD/SV/AG/SH


(Release ID: 2165787) Visitor Counter : 2
Read this release in: English