சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

காலியாக உள்ள இளநிலை, பி.டெக் மற்றும் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 10 SEP 2025 9:34PM by PIB Chennai

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தில் 2025-26-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள பல்வேறு நான்காண்டு இளநிலை, பி.டெக் மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2025-ம் ஆண்டு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ள மாணவர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தில் சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மையங்களை 2025 செப்டம்பர் 17 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12.00 மணிக்குள் நேரடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2025-ம் ஆண்டு பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்காதவர்கள் இப்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நேரில் வரக்கூடிய மாணவர்கள் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்டால் உடனடியாக ஆன்லைன் வழியாக  கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ரஜ்னீஷ் பூட்டானி தெரிவித்துள்ளார்.

***

AD/IR/AG/KR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2165468) வருகையாளர் எண்ணிக்கை : 59