தேர்தல் ஆணையம்
நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்துரையாடலை நிகழ்த்தியது
Posted On:
09 SEP 2025 9:16PM by PIB Chennai
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கியானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பிர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி திரு கே செந்தில்குமார் தலைமையிலான பிரதிநிதிக் குழுவுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். புதுதில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது பிரதிநிதிக் குழுவின் கருத்துக்களை தேர்தல் ஆணையம் பெற்றுக் கொண்டது.
பின்னணி:
பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் நடத்திவரும் கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றது. தேர்தல் ஆணையத்திடம் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களது கருத்துக்களையும் பிரச்சனைகளையும் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இந்த சந்திப்புகள் வழிவகை செய்கின்றன. தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப, அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து தேர்தல் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தும் ஆணையத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முன்முயற்சி ஒத்துப்போகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2165101
***
(Release ID: 2165101)
AD/BR/KR
(Release ID: 2165197)
Visitor Counter : 7