நிலக்கரி அமைச்சகம்
தூய்மைப் பணிகளின் சிறப்பு இயக்கம் 5.0, 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும்
Posted On:
08 SEP 2025 2:34PM by PIB Chennai
தூய்மைப் பணிகளின் சிறப்பு இயக்கம் 5.0, 2025 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தூய்மை இயக்கத்தின்போது மின்னணு கழிவுகளை அகற்றுதலில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளது.
கடந்தமுறை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 4.0 என்பது நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற பணிகள் மூலம் 78.46 லட்சம் சதுரஅடிக்கும் அதிகமான பரப்பளவிலான இடம் தூய்மைப்படுத்தப்பட்டது. 9,865 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டது. இதன்மூலம் ரூபாய் 38.27 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கிடையே சிறப்பு இயக்கம் 4.0-ன் போது நிலக்கரி அமைச்சகம், இடங்களை தூய்மைப்படுத்தியதில் முதலிடத்தையும், வருவாய் ஈட்டியதில் 4-ம் இடத்தையும் வகித்தது.
***
AD/IR/LDN/KR
(Release ID: 2164773)
Visitor Counter : 2