சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தரவரிசை பட்டியலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 4-வது இடத்தைப் பிடித்தது

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2025 7:12PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் 2025-ம் ஆண்டிற்கான உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டார். தேசிய தரவரிசை மதிப்பீட்டு நிறுவனம் நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வருகிறது.  மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மதிப்பீட்டு நிறுவனம் கற்பித்தல், கற்றல், கற்பிப்பதற்கான வளங்கள், ஆராய்ச்சி, தொழில்முறைப் பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், சமுதாய வளர்ச்சி, சேவைக்கான முயற்சி, அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பை வழங்குதல், கல்வி நிறுவனம் குறித்த அறிஞர்களின் அங்கீகாரம் ஆகிய ஐந்து காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது.

தேசிய தரவரிசை மதிப்பீட்டு நிறுவனத்தின் மூலம் இன்று வெளியிடப்பட்ட தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரிகளுக்கான தரவரிசையில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 5-வது இடத்தில் இருந்த இந்த கல்வி நிறுவனம், நடப்பாண்டில் 4-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இது மருத்துவக் கல்வி வழங்குவதில் ஜிப்மரின் தொடர் முயற்சிகளுக்கு  சான்றாக அமைந்துள்ளது.

இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக ஜிப்மர் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், புதுமையாள கற்றல் முறைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தேசிய தரவரிசை மதிப்பீட்டு நிறுவனத்தின் இந்த அங்கீகாரம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் உயர் தரத்தைப் பராமரிப்பதற்கான எங்களது உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்குவதுடன் மனிதாபிமான சேவைகள் புரியும்  மருத்துவத் துறை அனைத்து துறைகளிலும் எதிர்காலத்திற்கு தேவையான  தலைவர்களை உருவாக்குவதே இந்த கல்வி நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என்று அந்த நிறுவனத்தின் இயக்குநர் திரு நேகி கூறினார்.

     

***

AD/SV/KPG/DL

 


(வெளியீட்டு அடையாள எண்: 2163877) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English