சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
ஐஐடி மெட்ராஸ் உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது
प्रविष्टि तिथि:
04 SEP 2025 6:53PM by PIB Chennai
இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 10-வது ஆண்டாக இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), முதலிடம் பிடித்துள்ளது. தேசிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டு நிறுவனம், பொறியியல் துறையில், உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், அனைத்து வகையான பிரிவுகளின் செயல்பாடுகளில் தொடர்ந்து 7-வது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் முதலிடத்தில் நீடிக்கிறது.
புதுமை கண்டுபிடிப்புகளுக்கான பிரிவில், குறிப்பிடத்தக்க சாதனையாக ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மேம்பட்டுள்ளதன் காரணமாக முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் என்ற புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பிரிவில் இந்த கல்வி நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.
இந்த கல்வி நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதை அங்கீகரிக்கும் வகையிலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கான பாடத்திட்டத்தை அண்மையில் உருவாக்கியதற்காகவும், ஸான்சிபாரில் முழு அளவிலான வெளிநாட்டு வளாகம், விளையாட்டு மற்றும் பண்பாட்டுக் கலைகள் தொடர்பான பாடப்பிரிவுகளில் புதிய மாணவர் சேர்க்கை போன்ற துறைகளின் சிறப்பான செயல்பாடுகள் தரவரிசைப் பட்டியலில் உயர் இடத்தைப் பிடிக்க உதவியுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகவும், உலக அளவில் விரைவான வளர்ச்சிக் கண்டு வரும் கல்வி நிறுவனமாகவும் ஐஐடி மெட்ராஸ் தனது தரநிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
***
AD/SV/KPG/DL
(रिलीज़ आईडी: 2163869)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English