சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தமிழ்நாட்டில் சாலைக் கட்டமைப்பு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் கௌரவிக்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2025 6:53PM by PIB Chennai

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர்கள் கூட்டமைப்பின் இரண்டாவது வருடாந்தர கூட்டத்தின் போது, நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, தமிழ்நாட்டில் சாலை கட்டமைப்பு வளர்ச்சிக்கு  பங்களிப்பை வழங்கியதற்கான விருது வழங்கப்பட்டது. சென்னையில்  2025 ஆகஸ்டு மாதம் 28 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற உள்கட்டமைப்பு வர்த்தக கண்காட்சிக்கு இடையே ,இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்தச் சிறப்பு மிக்க விருதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் வழங்க அதை இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பாக தமிழ்நாடு மாநில நிர்வாக இயக்குநர் திரு எம். அண்ணாதுரை பெற்றுக் கொண்டார். அப்போது தலைமைப் பொது மேலாளர் திரு விவேக் கோயலும் உடனிருந்தார்.

 

இந்தியன் ஆயில் நிறுவனம், தமிழகத்தின் தார் தேவைகளில் சுமார் 60 சதவீதத்தை வழங்குகிறது. ஆண்டுக்கு 400 டிஎம்டி அளவுக்கு விநியோகம் செய்கிறது.

 

இந்த விருது, மாநிலத்தின் தார் விநியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வலிமையான இருப்பை அங்கீகரிப்பதுடன் தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முக்கிய கூட்டாளி ஆக செயல்பட்டு உலகத் தரம் வாய்ந்த சாலை கட்டமைப்பு உருவாக்கத்திற்காக இந்நிறுவனம் உறுதுணை புரியும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

 

***

SS/IR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2163463) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English