சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.12.5 கோடி மதிப்பிலான சிகரெட்டுகள், மதுபானங்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் அழித்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2025 3:15PM by PIB Chennai
வெளிநாட்டு சிகரெட்டுகள், இ-சிகரெட்டுகள் மற்றும் இதர சட்டவிரோதப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கும்மிடிப்பூண்டியில் 25.08.2024 அன்று 5.5 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை அழித்தனர். இந்தியாவிற்கு கடத்தப்பட்டு வந்த இந்த சிகரெட்டுகள், இ-சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் மற்றும் மற்ற கடத்தல் பொருட்களின் மதிப்பு ரூ. 12.5 கோடியாகும்.
N4FP.jpg)
இந்த கடத்தப்படும் சிகரெட்டுகளுக்கு வழக்கமாக சுங்க வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தாமல் உள்நாட்டிற்கு கடத்தப்பட்டு வருவதால் நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. வரியைத் தவிர்ப்பதற்காக சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
I932.jpg)
1ZJ1.jpg)
***
SS/IR/RJ/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2163156)
வருகையாளர் எண்ணிக்கை : 19