சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை இயக்குகிறது
Posted On:
30 AUG 2025 8:16PM by PIB Chennai
தற்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ள இந்தியா, 2030 ஆம் ஆண்டுக்குள் 7.3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறும் பாதையில் உள்ளது. இந்த உந்துதல், தீர்க்கமான நிர்வாகம், தொலைநோக்கு சீர்திருத்தங்கள் மற்றும் செயலில் உள்ள உலகளாவிய ஈடுபாட்டால் இயக்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு 6.5% ஆக இருந்தது.
பணவீக்கத்தின் விளைவுகளை நீக்கிய பிறகு பொருளாதாரத்தின் உற்பத்தியை அளவிடும் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2024–25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.5% வளர்ச்சியடைந்தது. 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில், உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹47.89 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவான ₹44.42 லட்சம் கோடியைவிட, 7.8% வளர்ச்சியைக் குறிக்கிறது.
2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 4,26,45,000 கோடியை (5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) அடையும் என்றும், 2028-ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை விஞ்சும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள், இந்தியா 7.3 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மறைமுக வரிகளின் வலையமைப்பை ஒரு ஒருங்கிணைந்த அமைப்புடன் மாற்றியது, இணக்கத்தை எளிதாக்கியது, செலவுகளைக் குறைத்தது மற்றும் மாநிலங்களுக்கு இடையே பொருட்களின் தடையற்ற இயக்கத்தை செயல்படுத்தியது. ஜிஎஸ்டி கவுன்சிலால் தீர்மானிக்கப்பட்ட 5%, 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரி முறையை இந்தியா பின்பற்றுகிறது. இன்று, சுமார் 1.52 கோடி ஜிஎஸ்டி பதிவுகள் செயலில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கர்நாடகா ஆகியவை கிட்டத்தட்ட 50% பங்களிக்கின்றன. எதிர்காலத்தைப் பொறுத்தவரை, அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரிகளைக் குறைத்தல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இணக்கத்தை எளிதாக்குதல் மற்றும் மிகவும் வெளிப்படையான, குடிமக்களுக்கு ஏற்ற வரி முறையை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும்.
இந்தியாவில் வேலைவாய்ப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது இளைஞர்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் அதன் வளர்ச்சியடைந்த தொலைநோக்குப் பார்வையில் அரசின் கவனத்தை பிரதிபலிக்கிறது.
மேலும், ஜூலை 18, 2025 நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 695.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஜூன் 27, 2025 உடன் முடிவடைந்த வாரத்தில் இது 700 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.
இளம் மக்கள்தொகை மற்றும் நீடித்த உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களால் தூண்டப்பட்டு, இந்தியா உலகளாவிய வர்த்தகம், முதலீடு மற்றும் புதுமைகளில் அதன் பங்கை மறுவரையறை செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், அது ஒரு சுயசார்பு கொண்ட, உலகளவில் போட்டித்தன்மை வாய்ந்த சக்தியாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தின் மையத்தில் புத்தாக்கம், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை இயக்கும் தற்சார்பு இந்தியா உள்ளது
***
AD/RB/RJ
(Release ID: 2162365)
Visitor Counter : 28