தேர்தல் ஆணையம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்துரையாடல்
Posted On:
28 AUG 2025 3:09PM by PIB Chennai
பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் உரையாடல்களின் தொடர்ச்சியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் கலந்துரையாடல் மேற்கொண்டது.
தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் திரு ஞானேஸ்வர் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமையிலான பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
தேசிய மற்றும் மாநிலக் கட்சித் தலைவர்கள் தங்கள் பரிந்துரைகள் மற்றும் கவலைகளை ஆணையத்துடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்ள உதவும் ஆக்கபூர்வமான விவாதங்களின் நீண்டகாலத் தேவையை இந்த உரையாடல்கள் வழங்குகின்றன. அனைத்து பங்குதாரர்களுடனும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு ஏற்ப தேர்தல் நடைமுறையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஆணையத்தின் பரந்த பார்வையுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த 150 நாட்களில், மொத்தம் 4,719 அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன, இதில், தலைமை நிர்வாக அதிகாரிகளால் 40 கூட்டங்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால், 800 கூட்டங்கள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் 28,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை ஈடுபடுத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் 3879 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சி வரிசையில், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி, தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
திமுக, அஇஅதிமுக, திரிணமூல் காங்கிரஸ், சிவசேனா, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட 17 மாநிலக் கட்சி பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல் நடந்து முடிந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்நிக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161488
***
(Release ID: 2161488)
AD/PKV/KR
(Release ID: 2161581)
Visitor Counter : 11