தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஷாதோல், கோர்பா பகுதிகளில் மொபைல் சேவை நிறுவனங்களின் நெட்வொர்க் தரத்தை மதிப்பீடு செய்தது டிராய்
Posted On:
27 AUG 2025 1:41PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 2025 ஜூலையில், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல், கோர்பா நகரங்கள், ஷாதோல் முதல் கோர்பா நெடுஞ்சாலை, கோர்பா முதல் ராஜ்நந்த்கான் ரயில் பாதை ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் நெட்வொர்க் தொடர்பான சோதனைகளை நடத்தியது. இதில் நகர்ப்புற மண்டலங்கள், முக்கிய இடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு இடங்களில் மொபைல் நெட்வொர்க் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டது.
2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி ஆகிய தொழில்நுட்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. இது பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கிறது. I
இந்த சோதனையின்போது குரல் சேவைகள், தரவு சேவைகள் இரண்டும் மதிப்பிடப்பட்டன.
ஏர்டெல், பிஎஸ்என்எல், ஆர்ஜேஐஎல், விஐஎல் முறையே 94.73%, 85.00%, 99.13%, 96.91% சிறந்த அழைப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது சோதனையில் தெரியவந்தது.
***
(Release ID: 2161129)
AD/SMB/PLM/DL
(Release ID: 2161176)