தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மதுரா நகரம் முழுவதும் மொபைல் நெட்வொர்க் தரத்தை மதிப்பிட்டது டிராய்
Posted On:
26 AUG 2025 2:21PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஜூலை மாதத்தில் விரிவான நகர வழித்தடங்களை உள்ளடக்கிய உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான சோதனை முடிவுகளை வெளியிட்டது. தில்லியில் உள்ள டிராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்தச்சோதனைகள் பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் மொபைல் நெட்வொர்க் செயல்திறனைப் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜூலை 17 முதல் 19 வரை, டிராய் குழுக்கள் 214.7 கிமீ தூரத்துக்கு, 8 ஹாட்ஸ்பாட் இடங்கள் மற்றும் 1 இடத்தில் இன்டர்-ஆபரேட்டர் அழைப்பு ஆகியவற்றில் விரிவான சோதனைகளை மேற்கொண்டன. மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களில் 2ஜி, 3ஜி , 4ஜி, 5ஜி ஆகியவை அடங்கும். இது பல கைபேசி திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கிறது.
இதே போல மதுராவில், பிருந்தாவன், பனிகான் காதர், திவானா, ஹயாத்பூர், மகாபன் பங்கர், கோகுல், மதுரா சுத்திகரிப்பு நகர், மஹோலி, தாதியா, பாலி கேரா மற்றும் ஜனம் பூமி போன்ற அதிக அடர்த்தி கொண்ட சுற்றுப்புறங்களில் சோதனைகள் நடைபெற்றன. தில்லி பப்ளிக் பள்ளி, மாவட்ட மருத்துவமனை மதுரா, ஜிஎல்ஏ பல்கலைக்கழகம், மதுரா மாவட்ட நீதிமன்றம், மதுரா ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம் மதுரா, பிரேம் மந்திர், விஷ்ரம் காட் ஆகிய இடங்களிலும் டிராய் நிலைமைகளை மதிப்பீடு செய்தது.
டிராய் பரிந்துரைத்த உபகரணங்கள் மற்றும் நிகழ்நேர சூழல்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்பட்டன. விரிவான அறிக்கை டிராய் வலைத்தளமான www.trai.gov.in இல் கிடைக்கிறது.
***
(Release ID: 2160842)
AD/PKV/SG
(Release ID: 2160967)