சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் சார்பில் கல்வி நிறுவனங்களின் வலையமைப்புகளுக்கான முன்முயற்சி குறித்தப் பயிலரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2025 12:44PM by PIB Chennai

திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக  நிறுவனத்தின் கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை, கல்வி நிறுவனங்களின் வலையமைப்புகளுக்கான உலகளாவிய முன்முயற்சியை ஏற்பாடு செய்தது. இது மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இது "தசைகளின் இயக்கவியல் மாதிரிகள், இயக்கங்கள் மற்றும் அளவீடுகள்" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை பயிலரங்கை நடத்தியது. இதன் தொடக்க விழா 2025 ஆகஸ்ட் 25, அன்று ஐரிஸ் அரங்கில் நடைபெற்றது.

 

கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறை பேராசிரியரும் தசைகளின் இயக்கவியல் மாதிரிகள், இயக்கங்கள் மற்றும் அளவீடுகள் 2025-ன் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் N சிவகுமாரன், வரவேற்புரையாற்றினார். உயிரி மருத்துவ பொறியியல் துறையில் திறன்களை மேம்படுத்துதல், புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவது, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது, திறன் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிலரங்கின் முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கினார்.

இந்தப் பயிலரங்கு எலக்ட்ரோமையோகிராஃபி சமிக்ஞை கையகப்படுத்தல், சமிக்ஞை  செயலாக்கம், புனரமைப்பு மற்றும் தொழில்துறையில் எலக்ட்ரோமையோகிராஃபியின் பயன்பாடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.

 

கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையின் தலைவர் டாக்டர் கே. ஸ்ரீனிவாசன், துறையிலுள்ள வசதிகள் குறித்து விளக்கினார். மேலும் அவர் கல்வி நிறுவனங்களின் உலகளாவிய முன்முயற்சியின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் உயிரி மருத்துவ பொறியாளர்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார்.

***

AD/IR/KPG/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2160812) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English