கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பையின் கொலாபாவில் அசாமுக்கு நிலம் வழங்குவதாக மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் அறிவித்தார்; மும்பை துறைமுக ஆணையத்தால் 60 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும்

Posted On: 24 AUG 2025 8:37PM by PIB Chennai

அசாமின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில், மும்பை துறைமுக ஆணையத்தால் நான்கு பிகா நிலங்கள் அசாம் அரசுக்கு 60 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு  சர்பானந்த சோனோவால் அறிவித்தார். மும்பையின் கொலாபாவின் பிரதான மனை வணிகப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலப்பகுதி, மாநிலத்தின் குடிமக்களின் நேரடி நன்மைக்காக அத்தியாவசிய பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும்.

மக்களின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு பிரத்யேக மையம் அல்லது உள்கட்டமைப்பு திட்டத்திற்கு நிலம் ஒதுக்கக் கோரி, அசாம் தலைமைச் செயலாளர், மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இன்றைய அறிவிப்பின் மூலம், சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் மக்களை மையமாகக் கொண்ட திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதில் அசாமுக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனோவால், “இது மக்களை முதன்மைப்படுத்தும் முயற்சி. இந்த நிலத்தை 60 ஆண்டுகள் அசாம் அரசுக்கு வழங்குதன் மூலம், வருங்கால சந்ததியினருக்கு சேவை செய்யும் முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்க நாங்கள் உதவுகிறோம். அசாம் மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப இந்தத் திட்டம் உருவாக்கப்படும். மும்பையின் மையப்பகுதியில் கொலாபாவில் அமைந்துள்ள இது, மும்பை நகரத்தில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அணுகல் என்ற அசாம் மக்களின் பெரிய விருப்பத்தை நிறைவேற்றும்”, என்று தெரிவித்தார்.

இந்த வளர்ச்சி குறித்து அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் நேரில் பேசியதாக மத்திய அமைச்சர் மேலும் தெரிவித்தார். மத்திய அரசின் ஆதரவை முதல்வர் ஆழ்ந்த திருப்தியுடன் பாராட்டினார். இந்த நடவடிக்கை அசாமின் வளர்ச்சிக் கதைக்கு ஒரு முக்கிய பங்களிப்பாகவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் ஒரு மைல்கல்லாகவும் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்,” என்று திரு சர்பானந்த சோனோவால் மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2160393

***

AD/RB/RJ


(Release ID: 2160545)