சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னையில் ஆயுஷ் ஆசிரியர்கள்/விஞ்ஞானிகளுக்கான ஆறு நாள் மருத்துவக் கல்வி பயிற்சி இன்று நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
23 AUG 2025 7:38PM by PIB Chennai
ஆயுர்வேதத் துறையில் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சென்னையில் ஆயுஷ் மருத்துவர்கள்/ விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6 நாள் பயிற்சி இன்று நிறைவடைந்தது. 18.08.2025 அன்று தொடங்கி 23.08.2025 அன்று நிறைவடைந்த இந்தப் பயிற்சித் திட்டத்தில் நவீன ஆராய்ச்சி முறைகள், புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் சமகால மருத்துவ அறிவியலுடன் பாரம்பரிய நடைமுறைகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட ஆயுர்வேதத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய நிபுணர்களின் விரிவுரைகள் மற்றும் பயிலரங்குகள் இடம்பெற்றன.

தொடக்க விழாவில், பெங்களூருவின் ஹிமாலயா ஆரோக்கிய நிறுவனத்தின் ஆயுஷ் அறிவியல் விவகாரங்கள் பிரிவின் மூத்த மேலாளர் டாக்டர் அசோக் பி.கே. தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, "உலகளாவிய இணக்கமான ஆயுஷ் தயாரிப்புகளை உருவாக்குவதில் சான்றுகள் சார்ந்த ஆராய்ச்சியின் அவசியம்" என்ற தலைப்பில் பேசினார்.

பின்னர் நடைபெற்ற பல்வேறு அமர்வுகளில் டாக்டர் கே.என். சுனில் குமார், டாக்டர் சீனி, டாக்டர் ஏ. ஹன்னா ரேச்சல் வசந்தி, டாக்டர் பரிமேலழகன் தங்கராஜ், டாக்டர் கருணா சங்கர், டாக்டர். எம். மருது ராமச்சந்திரன், டாக்டர் தேவி. ஜே, டாக்டர். எஸ். சித்ரா, டாக்டர். எம்.சி. சௌம்யா, திரு விஷ்ணு வல்சன் கே, டாக்டர் கௌசிக் கோஷ், டாக்டர் அருணாதேவி.ஆர்., டாக்டர் சுவாமி சி.டி. திருமதி தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரையாற்றினர். ஆயுஷ் அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்டு, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யாபீடத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தை பேராசிரியர் வைத்யா ரபிநாராயண் ஆச்சார்யா பொறுப்பேற்று நடத்தினார்.

இன்று (23.08.2025) நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் டாக்டர் எஸ். சித்ரா வரவேற்புரையாற்றினார். ஜாம்நகரைச் சேர்ந்த மருந்தியல் ஆய்வகத் தலைவர் டாக்டர் நரியா முகேஷ்குமார் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, பயிற்சித் திட்டத்தில் பெற்ற அறிவை அந்தந்தத் துறையில் பயன்படுத்த அனைத்து பங்கேற்பாளர்களையும் வலியுறுத்தினார். பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்கள், திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருந்த அனைத்து அதிகாரிகள்ஆகியோருக்கு உதவி ஆராய்ச்சி அதிகாரி திரு பிரேம் குமார் நன்றி தெரிவித்தார்.
****
AD/SMB/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2160199)
வருகையாளர் எண்ணிக்கை : 19