சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக வளாகத்தில் ஆகஸ்ட் 11, 2025 அன்று நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 12 AUG 2025 6:13PM by PIB Chennai

எந்தவொரு அவசரநிலையின் போதும் பொதுமக்கள் உடனடி உதவியைப் பெறுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை, காவல் உதவி செயலியை அறிமுகப்படுத்தியது. காவல் உதவி செயலி கட்டுப்பாட்டு அறைக்கு 'அவசர எச்சரிக்கையை அனுப்பி உடனடி காவல் உதவி பெற வழிவகை செய்கிறது. உதவி கோருவோரின் இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வசதி, தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் குறுஞ்செய்தி மூலம் உதவி கோருவோரின் இருப்பிடத்தை அறியும் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இச்செயலி கொண்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மத்திய மண்டலத்தின் அஞ்சல் துறைத் தலைவர் திருமதி தி நிர்மலா தேவியின் வழிகாட்டுதலின் பேரில், காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்து அஞ்சல் துறையில் பணியாற்றும் பெண் தபால்காரர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலக வளாகத்தில் ஆகஸ்ட் 11, 2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி வனிதா பங்கேற்று செயலியின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார். திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றும் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண் தபால்காரர்கள் பங்கேற்றனர். மேலும் இச்செயலியை தங்கள் அலைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறைகளையும் அறிந்துகொண்டனர்.

மேலும் இதேபோன்று கிராமிய அஞ்சல் பணியாளர்களுக்கு காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்த விளக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 12, 2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு நா.பிரகாஷ் மற்றும் உதவி இயக்குனர் (அஞ்சல்) திரு சி.பசுபதி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

***

AD/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2155702) வருகையாளர் எண்ணிக்கை : 4