ஜல்சக்தி அமைச்சகம்
நதிகள் மாசடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள்
Posted On:
11 AUG 2025 3:27PM by PIB Chennai
கடந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொள்ளப்பட்ட நதிநீரின் தரம் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாசடைந்த நதிகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் 2009, 2015, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 30 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 279 நதிகளில் 311 இடங்களில் நதிகள் மாசடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில் 351 மாசடைந்த நதிப்பகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த 2022-ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 311-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022-ம் ஆண்டில் 106 மாசடைந்த நதிப்பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 74 மாசடைந்த நதிப்பகுதிகளின் நீரின் தரம் மேம்பட்டுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாநிலங்களில் உள்ள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாசு கட்டுப்பாட்டுக் குழுக்களுடன் இணைந்து தேசிய நீர்த்தர கண்காணிப்பு கட்டமைப்புகளை நிறுவியுள்ளது.
நதிநீரின் தரத்தை மேம்படுத்தும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷண் செளத்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2155023)
AD/TS/SG/DL
(Release ID: 2155237)