சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை ஐஐடி கற்பித்தல் கற்றல் மையம் கல்லூரி ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா ஸ்டெம் பயிற்சியைத் தொடங்கியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2025 5:17PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி சென்னை), கல்லூரி ஆசிரியர்களுக்கு ஸ்டெம் (இயற்பியல், வேதியியல், கணிதம்), உயிரித் தொழில்நுட்பம் குறித்த பயிற்சித் திட்டத்தை வழங்குவதற்காக கற்பித்தல் கற்றல் மையத்தை தொடங்கியுள்ளது.

மாளவியா ஆசிரியர் பயிற்சித் திட்ட இயக்கம் சார்பில் இளங்கலை, முதுகலை அறிவியல் படிப்புகளை கற்பிப்பதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு நேரடியாகவும், இருப்பிடத்தில் இருந்தும் திறன் மேம்பாட்டு படிப்பு கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள கல்லூரி ஆசிரியர்களை இலக்காகக் கொண்ட இந்த முயற்சிக்காக சென்னை ஐஐடி கற்பித்தல் கற்றல் மையம், போத்பிரிட்ஜ் கல்வி  நிறுவனத்துடன் கூட்டாண்மையை மேற்கொண்டுள்ளது.  ஆர்வமுள்ள ஆசிரியர்கள்   https://fundaspring.com/products/capacity-building-stem-faculty-iit-madras-malaviya-mission- என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் ஒவ்வொரு குழுவிலும் 50 பேர் பங்கேற்பார்கள். தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் பற்றிய விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் (இளங்கலை மற்றும் முதுகலை) கற்பிக்கும் கல்லூரி ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

இந்த பாடத்திட்டம் குறித்து கூறிய சென்னை ஐஐடி கற்பித்தல் கற்றல் மையத்தின் தலைவர் பேராசிரியர் எடமன பிரசாத், கற்பிக்கும் செயல்திறனை மேம்படுத்தவும், மாணவர்களின் கற்றல் அனுபவங்களை வளப்படுத்தவும், ஈடுபாட்டையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் கல்விச் சூழலை மேம்படுத்தும் வகையில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். மாணவர் செயல்திறனை வலுப்படுத்துதல், ஸ்டெம் துறைகளில் அதிக சேர்க்கையை ஊக்குவித்தல், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

உயிரி தொழில்நுட்பம்: 2025 ஆகஸ்ட் 22, முதல் ஆகஸ்ட் 30 வரை

வேதியியல்: அக்டோபர் 7 முதல் அக்டோபர் 17 வரை

இயற்பியல் தொகுதி 1: நவம்பர் 11 முதல் நவம்பர் 19 வரை

இயற்பியல் தொகுதி 2: நவம்பர் 20 முதல் நவம்பர் 28 வரை

கணிதம்: டிசம்பர் 15 முதல் டிசம்பர் 24 வரை பயிற்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

***

AD/IR/AG/SG


(வெளியீட்டு அடையாள எண்: 2155098) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English