சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவுக்கான துறையை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது

प्रविष्टि तिथि: 07 AUG 2025 7:16PM by PIB Chennai

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), ஆழ்ந்த தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்க உலகத்தரம் வாய்ந்த சூழலை உருவாக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுக்கான பள்ளியைத் தொடங்கியுள்ளது. தொழில்முனைவு பல்கலைக்கழகங்களின் உலகளாவிய வரைபடத்தில் இக்கல்வி நிறுவனத்தை இடம்பெறச் செய்வதே இதன் நோக்கமாகும்.

இத்துறையை ஆகஸ்ட் 4, 2025 அன்று சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி தொடங்கி வைத்தார். புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு துறைக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவரும், தொடர் ஆசிரிய-தொழில்முனைவோரும், சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறையின் மதிப்புமிகு ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால் தலைமை தாங்குவார். இந்த துறை தொழில்முனைவுத் துறையில் குறுகிய காலப் படிப்பையும், எம்.எஸ் (தொழில்முனைவு) பட்டம் ஆகியவற்றையும் வழங்கும்.

புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவுப் பள்ளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “கடந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு 1.2 காப்புரிமைகளை கிடைக்கப் பெற்றதுடன், 100-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். பி.டெக் திட்டத்தின் இரண்டாம் ஆண்டில், தொழில்முனைவு மற்றும் அமைப்பு உருவாக்கம் குறித்த பாடத்திட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது குறுகிய கால பாடத்திட்டம் ஒன்றும் உள்ளது என்று அவர் கூறினார்.

முன்னாள் மாணவர்களிடமிருந்து சுமார் ரூ. 200 கோடிக்கான உறுதிமொழிகளைப் பெற்றுள்ளோம். சென்னை ஐஐடி-தொழில் ஊக்குவிப்பு புத்தாக்க நிறுவனங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவுப் பள்ளியின் கல்வித் தேவைகளை எளிதாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை பல்துறைப் படிப்புகளுக்கான துறை வழங்கும் என்று துறையின் தலைவர் பேராசிரியர் அன்பரசு மணிவண்ணன் கூறினார்.

"புத்தொழில் ஆர்வலர்களுக்கு சென்னை ஐஐடியில் கிடைத்துவரும் கட்டமைக்கப்பட்ட கல்விக்கான சிறந்த முயற்சிகளில் இந்தப் துறையும் ஒன்றாகும் என்று துறையின் தலைவர் பேராசிரியர் பிரபு ராஜகோபால் தெரிவித்தார்.

***

AD/SMB/AG/DL


(रिलीज़ आईडी: 2153812) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English