தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து எந்த அரசியல் கட்சியும் இதுவரை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை: தேர்தல் ஆணையம்

Posted On: 06 AUG 2025 12:02PM by PIB Chennai

பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து இதுவரை (ஆகஸ்ட் 6 காலை 9 மணி வரை)  எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும்,  உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் பெறப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையம் 2025 ஆகஸ்ட் 6-ம் தேதி  அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான முகவர்கள் உள்ளனர் என்றும் இவர்கள் மூலமாக எந்தவொரு உரிமை கோரல், அல்லது ஆட்சேபம் தொடர்பான மனுக்களும் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரைவு வாக்களார் பட்டியல் தொடர்பாக தகுதி உள்ள வாக்காளர்களை சேர்ப்பது மற்றும் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக நேரடியாக 3,659  உரிமை கோரல் அல்லது ஆட்சேப மனுக்கள்  பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடம் இருந்து  19,186 படிவம் 6 மற்றும் உறுதிமொழி விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இவற்றின் மீது விதிமுறைகளின்படி 7 நாட்கள் நிறைவடைந்த பின் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் மூலம் முடிவெடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆணையின்படி முறையான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட பிறகு வாய்மொழி உத்தரவு மூலம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர்கள் பட்டியலிலிருந்து எந்தவொரு வாக்காளர் பெயரும் நீக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

***

(Release ID: 2152881)

AD/SMB/KPG/KR


(Release ID: 2153175)
Read this release in: English , Urdu , Hindi