சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு சோதனைக் கூடம் தொடங்கப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2025 7:01PM by PIB Chennai

சென்னை கே கே நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய நோய் சிறப்பு சோதனைக் கூடம் (கேத் லேப்) தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழாவிற்கு இஎஸ்ஐ நிறுவன தலைமை  இயக்குநர் திரு அசோக் குமார் சிங் தலைமை வகித்தார். சுமார் 4 கோடி ரூபாய் செலவிலான இந்த சோதனைக் கூடம் மேக் இன் இந்தியா முன்முயற்சியை நிறைவு செய்வதாகும்.

இந்த சோதனைக் கூடம் தொடங்கப்பட்டதையடுத்து இஎஸ்ஐ பயனாளிகளுக்கு இதய நோய் கண்டதறிதலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் விரிவடைந்த சுகாதார சேவையில் இது குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமைந்துள்ளது.

இதய நோய் குறித்த அதிநவீன பரிசோதனை வசதி இந்த மருத்துவமனையின் செயல்பாட்டை மேலும் பலப்படுத்தும்.  இஎஸ்ஐ பயனாளிகளுக்கு உலகத் தரத்திலான சேவைகளை வழங்குவது மருத்துவ சாதனங்களை நவீனமயமாக்குவது என்ற இஎஸ்ஐ நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்தப் பரிசோதனைக் கூடத்தின் தொடக்கம் நிரூபிக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் இஎஸ்ஐ நிறுவன நிதி ஆணையர் திருமதி டி எல் யதீன், மருத்துவ ஆணையர்கள் டாக்டர் கம்லேஷ் ஹரீஷ், டாக்டர் அஷித் முல்லிக், டாக்டர் ரச்சிதா பிஸ்வாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

-----

AD/SMB/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2152714) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: English