சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அஞ்சல்தலை குறித்த போட்டியை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் நடத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
04 AUG 2025 7:20PM by PIB Chennai
அஞ்சல்தலை குறித்த விநாடி-வினா மற்றும் சமர்ப்பிக்கப்படும் அஞ்சல்தலை செய்முறை அடிப்படையில் அஞ்சல்தலை சேகரிப்பை பொழுதுபோக்காக கொண்டுள்ள கல்வியில் சிறந்து விளங்கும் 6 முதல் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படவுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு மையம் இருக்க வேண்டும். அதில் மாணவர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளியில் இந்த மையம் இல்லையெனில் மாணவர்களின் சுய அஞ்சல்தலை வைப்பு கணக்கு கருத்தில் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கான பிராந்திய அளவிலான எழுத்துப்பூர்வ விநாடி-வினா போட்டி 20.09.2025 அன்று நடத்தப்படவுள்ளது. இந்த விநாடி-வினா போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் இறுதிப் போட்டிக்காக அஞ்சல் தலை செயல்முறையை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 25.08.2025 கடைசி நாளாகும். விண்ணப்பங்களை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
***
AD/IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2152275)
வருகையாளர் எண்ணிக்கை : 11