தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மொபைல் சேவை நெட்வொர்க் தரம் குறித்து ட்ராய் ஆய்வு
Posted On:
31 JUL 2025 1:13PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய், மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ், உஜ்ஜைனி நகரங்கள், தேவாஸ்-இந்தூர்-உஜ்ஜைனி, போபால் நெடுஞ்சாலைகள் மற்றும் போபாலின் பந்தூர்ணா ரயில் பாதை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்பட்ட ஆய்வுகளை 2025 ஜூன் மாதத்தில் நடத்தியது. நகர்ப்புற மண்டலங்கள், ஹாட்ஸ்பாட்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் செயல்திறன் குறித்து ஆய்வு நடைபெற்றது.
ட்ராய் மூலம் நியமிக்கப்பட்ட நிறுவனம் மூலம், 352.2 கிமீ தூரம் நகர பகுதிகளிலும், தேவாஸ், உஜ்ஜைனி மற்றும் இந்தூரில் 6.3 கிமீ தூரம் நடைபயிற்சி மூலமும் ஆய்வு நடத்தியது. தேவாஸ்-இந்தூர்-உஜ்ஜைனி மற்றும் போபால் நெடுஞ்சாலைகளில் 219.9 கி.மீ தூரமும் நெடுஞ்சாலை ஓட்டுநர் சோதனை நடத்தப்பட்டது.
2025 ஜூன் 2 முதல் 2025 ஜூன் 7 வரை போபாலில் இருந்து பந்தூர்னா வரையிலான ரயில் பாதையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகள் போபாலில் உள்ள ட்ராய் மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டன.
நெடுஞ்சாலை ஓட்டுநர் சோதனையின் போது, அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களின் சிம் கார்டுகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட கைபேசிகளைப் பயன்படுத்தி 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளில் நேரடி தரவு மற்றும் குரல் அமர்வுகள் ஆய்வு செய்யப்பட்டன.
தரவு சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தி தொழில்நுட்ப வல்லுநர்களால் இந்த சோதனைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது, இதன் அடிப்படையில் இறுதி அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த மொபைல் நெட்வொர்க் செயல்திறன் கீழே வழங்கப்பட்டுள்ளது.
(5ஜி/4ஜி/3ஜி/2ஜி) தானியங்கி தேர்வு முறையில் அழைப்பு வெற்றி விகிதம் – ஏர்டெல்-லில் 95.41%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 48.49%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 98.48%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 93.78%-ஆகவும் உள்ளது.
(5ஜி/4ஜி/3ஜி/2ஜி) தானியங்கி பயன்பாட்டு முறையில் கால் டிராப் விகிதம் – ஏர்டெல்-லில் 0.46%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 6.23%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 0.22%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 1.49%-ஆகவும் உள்ளது.
(5ஜி/4ஜி) தானியங்கி பயன்பாட்டு முறையில் கால் துண்டிப்பு விகிதம் – ஏர்டெல்-லில் 0.48%-ஆகவும், பிஎஸ்என்எல்-லில் 7.22%-ஆகவும், ஆர்ஜேஐஎல்-லில் 0.63%-ஆகவும் மற்றும் விஐஎல்-லில் 1.44%-ஆகவும் உள்ளது.
இது குறித்த விரிவான அறிக்கைகள் www.trai.gov.in என்ற ட்ராய் இணையதளத்தில் கிடைக்கின்றன. கூடுதல் தகவல்களுக்கு, adv.bhopal@trai.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது போபாலில் உள்ள ட்ராய் இன் பிராந்திய அலுவலகத்தை +91-755-2575501 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
***
(Release ID: 2150595)
AD/GK/SG/KR
(Release ID: 2150769)