அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதுமையையும் வணிகமயமாக்கலையும் ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம், டூன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Posted On:
31 JUL 2025 1:30PM by PIB Chennai
ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வணிகமயமாக்கல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகமும் டேராடூனில் உள்ள டூன் பல்கலைக்கழகமும் டேராடூன் ஆளுநர் மாளிகையில் இன்று (31.07.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. உத்தராகண்ட் மாநில ஆளுநர் திரு குர்மித் சிங் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், மாநிலத்தில் கல்வி-தொழில் துறை மேம்பாட்டில் இது ஒரு மைல்கல் என்று கூறினார்,
உத்தராகண்டில் உள்ள ஒரு மாநில பல்கலைக்கழகத்துடன் தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் முதல் முறையாக இந்த ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், எதிர்கால கல்வி-தொழில் ஒத்துழைப்புக்கு இது ஒரு முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்கள் பாரம்பரிய கற்பித்தல் முறைகளை ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஆராய்ச்சிகளை ஊக்குவித்து, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநிலத்திற்கு பெருமளவில் பயனளிக்கும் என உத்தராகண்ட் ஆளுநர் கூறினார்.
***
Release ID: 2150609
AD/SM/PLM/KR
(Release ID: 2150680)