ஜல்சக்தி அமைச்சகம்
வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு
प्रविष्टि तिथि:
28 JUL 2025 4:25PM by PIB Chennai
மத்திய அரசு இணைய அடிப்படையிலான C-வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பிற்கான வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெள்ளப்பெருக்கு வரைபடங்கள் மற்றும் நீர் மட்ட கணிப்புகள் வடிவில் கிராமங்கள் வரை கிடைக்கக் கூடிய இரண்டு நாட்களுக்கு முன்கூட்டிய வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புகளை வழங்குகிறது. இந்த C-வெள்ள வலை அடிப்படையிலான தளத்தின் முக்கிய அம்சங்கள்:
C-வெள்ள வலைதளம் மேம்பட்ட இரு பரிமாண ஹைட்ரோடைனமிக் மாடலிங் மூலம் பெறப்பட்ட வெள்ளப்பெருக்கு வெளியீட்டுத் தகவலை விரிவான முறையில் ஆழமான நுட்பங்களுடன் ஒருங்கிணைக்கிறது.
அனைத்து நதிப் படுகைகளுக்கான தேசிய மற்றும் பிராந்திய நிறுவனங்களின் வெள்ள மாதிரி வெளியீடுகளை அந்தந்த செயல் திட்டங்களின்படி ஒருங்கிணைக்கும் ஒருங்கிணைந்த வெள்ளப்பெருக்கு தகவல் அமைப்பாக இது செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப கட்டத்தில் கோதாவரி, தபி மற்றும் மகாநதி நதிப் படுகைகளுக்கான வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்புகளை உள்ளடக்கியது.
இந்த வலை தளம் ஆரம்ப கட்டத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒடியா ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும்.
இதில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வெள்ளப்பெருக்கு முன்னறிவிப்பும் அடங்கும். இது கிராமங்கள் வரையிலான வெள்ளப்பெருக்கு தகவல்களைக் வழங்குகிறது.
வெள்ள ஆழத்தைப் பொறுத்து மூன்று வகையான வெள்ள எச்சரிக்கைகளை இது குறிக்கிறது: மஞ்சள் எச்சரிக்கை 0.5 மீட்டருக்கும் குறைவான வெள்ளத்தைக் குறிக்கிறது, ஆரஞ்சு எச்சரிக்கை 1.5 மீட்டருக்கும் குறைவான ஆழத்தைக் குறிக்கிறது, மற்றும் சிவப்பு எச்சரிக்கை 1.5 மீட்டருக்கு மேலான வெள்ளத்தைக் குறிக்கிறது.
இந்தத் தகவலை ஜல் சக்தி மாநில அமைச்சர் திரு ராஜ் பூஷண் சவுத்ரி இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வழங்கினார்.
***
(Release ID: 2149301)
AD/SM/DL
(रिलीज़ आईडी: 2149449)
आगंतुक पटल : 7