நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி சுரங்க கழிவுகளிலும், நிலக்கரி சாம்பலிலும் உள்ள முக்கிய கனிமங்கள்
प्रविष्टि तिथि:
28 JUL 2025 12:47PM by PIB Chennai
சிங்கரேணி அனல் மின் நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட சாம்பல், கழிவுகளிலிருந்து அரிய கனிமங்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட கழிவுகளிலும், கனிமங்களின் செறிவு இருப்பது கண்டறியப்பட்டது.
2024-25 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில் தேசிய முக்கிய கனிம இயக்கத்தின் கீழ் முன்னோடித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் நிலக்கரி சுரங்க கழிவுகளில் காணப்படும் அரிய மண் கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யும் திட்டப்பணிகளை கோல் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இத்துறையில் ஆய்வு செய்வதற்காக சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் ஐதராபாத் ஐஐடி உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்துள்ள பதிலில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149191
***
AD/TS/PLM/AG/KR
(रिलीज़ आईडी: 2149289)
आगंतुक पटल : 15