சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதித்துறை அமைப்பின் செயல்திறன்

Posted On: 25 JUL 2025 3:45PM by PIB Chennai

நாட்டின் நீதித்துறை அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது.

இதில் கணினிமயமாக்கல், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரித்தல், அதிகப்படியான வழக்குகளுக்கு ஆளாகும் பகுதிகளில் கொள்கை மற்றும் சட்டமன்ற நடவடிக்கைகள், வழக்குகளை விரைவாக முடிப்பதற்கான நீதிமன்ற நடைமுறைகளை மறுசீரமைத்தல், மனிதவள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவை அடங்கும்.

நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ், வழக்குரைஞர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நீதிமன்ற அரங்குகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், வழக்கறிஞர்கள் அரங்குகள், கழிப்பறை வளாகங்கள் மற்றும் டிஜிட்டல் கணினி அறைகள் கட்டுவதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது. 30.06.2025 நிலவரப்படி, இந்தத் திட்டம் 1993-94 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து ரூ. 12,101.89 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அரங்குகளின் எண்ணிக்கை (30.06.2014 நிலவரப்படி) 15,818 இலிருந்து (30.06.2025 நிலவரப்படி) 22,372 ஆகவும், குடியிருப்பு அலகுகளின் எண்ணிக்கை (30.06.2014 நிலவரப்படி) 10,211 இலிருந்து (30.06.2025 நிலவரப்படி) 19,851 ஆகவும் அதிகரித்துள்ளது.

 17 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 21 மெய்நிகர் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன, அவை 2.78 கோடிக்கும் அதிகமான வழக்குகளைக் கையாண்டன. மார்ச் 2023 வரை ரூ. 384.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு நீதிமன்றங்கள் திட்டத்தின் (2023-2027) மூன்றாம் கட்டம் ரூ.7,210 கோடி செலவில் 13.09.2023 அன்று அங்கீகரிக்கப்பட்டது, இது டிஜிட்டல், ஆன்லைன் மற்றும் காகிதமற்ற நீதிமன்றங்களை நோக்கி நகர்வதன் மூலம் நீதியை எளிதாக்கும் முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் தகவலை சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148360

****

(Release ID: 2148360)

AD/PKV/SG/DL


(Release ID: 2148544)
Read this release in: English , Urdu , Hindi