சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புலிகள், யானைகள் மற்றும் சிங்கங்கள் பற்றிய கணக்கெடுப்பு

Posted On: 24 JUL 2025 3:58PM by PIB Chennai

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலங்களுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை  புலிகள் கணக்கெடுப்பை நடத்துகிறது, இதன் அடிப்படையில் 2018-ல் 2967 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 3682 ஆக அதிகரித்துள்ளது. 2025-ல் குஜராத் மாநிலம் நடத்திய 16வது சிங்கங்கள் கணக்கெடுப்பின்படி சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, 2020-ல் 674 ஆக இருந்த மதிப்பீட்டை விட 2025-ல் 891 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் யானைகள் கணக்கெடுப்பு 2017-ல் நிறைவடைந்தது. 2012 இல் 29391-30711 என மதிப்பிடப்பட்ட வரம்பிலிருந்து 2017-ல் யானைகளின் எண்ணிக்கை 29964 ஆக மதிப்பிடப்பட்டது.

இந்தத் தகவலை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், இன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

புலிகளைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவில் 58 புலிகள் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, அவை கிட்டத்தட்ட நாட்டின் புவியியல் பரப்பளவில் 2.5%. சிங்கங்களைப் பொறுத்தவரை, குஜராத் மாநிலம் குஜராத்தில் உள்ள பர்தாவில் சிங்கங்களுக்கான இரண்டாவது வீடாக உருவாக்கியுள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களின் வாழ்விடத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வாழ்விட மேம்பாட்டுப் பணிகள்,  பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே புல்வெளிகளை மேம்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யானைகளைப் பாதுகாப்பதற்காக, 14 யானைகள் வாழும் மாநிலங்களில் 33 யானை காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

 மனித-வனவிலங்கு மோதலை நிர்வகிப்பதற்கு அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்துள்ளது,

யானைகள், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது, மனித-யானை மோதல் மற்றும் நாட்டில் உள்ள சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளின் நலன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு 1992-ம் ஆண்டு யானைத் திட்டம் தொடங்கப்பட்டது. யானைப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் மோதலைக் குறைப்பதற்கும் முக்கியமான யானை வாழ்விடங்கள் 'யானை சரணாலயம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

புலிகளைப் பொறுத்தவரை, இந்திய அரசு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம்  3 அம்ச உத்தியை இந்திய அரசு கையாண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147750

***

AD/PKV/DL


(Release ID: 2147961)
Read this release in: English , Hindi