தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தில்லியிலிருந்து மீரட் வரையிலான நெடுஞ்சாலைப் பாதை முழுவதும் இணையத் தரவு தரத்தை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பிடுகிறது
Posted On:
24 JUL 2025 4:27PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), உத்தரப் பிரதேச (மேற்கு) உரிமம் பெற்ற சேவைப் பகுதிக்கான (LSA) அதன் தனிப்பட்ட தரவு தர (IDT) முடிவுகளை வெளியிட்டது. இது 2025 ஜூன் மாதத்திற்கான விரிவான நகரம் மற்றும் நெடுஞ்சாலை வழித்தட தரவுகளை உள்ளடக்கியது. தில்லியில் உள்ள இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த தரவுத் தர முடிவுகள், நகர்ப்புற மண்டலங்கள், நிறுவன முக்கிய வழித்தடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் மற்றும் அதிவேக தாழ்வாரங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் நிகழ் நேர கைபேசித் தரவு செயல்திறனைப் படம்பிடிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜூன் 2, 2025 முதல் ஜூன் 4, 2025 வரை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) குழுக்கள் 216.2 கிமீ நகர தரவுத் தர பரிசோதனை, 64.9 கிமீ நெடுஞ்சாலை தரவுத் தர பரிசோதனை, 9 முக்கிய வழித்தட தரவுத் தர பரிசோதனை மற்றும் 2 இடங்களில் இரு வேறு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புத் திறன் அழைப்பு ஆகியவற்றில் விரிவான சோதனைகளை மேற்கொண்டன. மதிப்பீடு செய்யப்பட்ட தொழில்நுட்பங்களில் 2G, 3G, 4G மற்றும் 5G ஆகியவை அடங்கும், இது பல கைபேசி திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கிறது. தரவுத் தர பரிசோதனையின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே தொடர்புடைய அனைத்து சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மீரட்டில் கங்கா நகர், ஜெய் பீம் நகர், லோஹியா நகர், மாதவ் புரம், பார்த்தாபூர், மல்யானா, டப்கா, கான்கர் கெரா, மீரட் கான்ட் & சாகேத் போன்ற அதிக அடர்த்தி கொண்ட சுற்றுப்புறங்கள் மதிப்பீட்டில் அடங்கும், மேலும் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம், மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், ஐஐஎம்டி பல்கலைக்கழகம், மீரட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மீரட் ரயில் நிலையம், மீரட் சாலைகள் பேருந்து நிலையம், பிவிஎஸ் மால், எஸ்டிஎஸ் குளோபல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் செயின்ட் பிரான்சிஸ் வேர்ல்ட் பள்ளி போன்ற முக்கிய இடங்களையும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மதிப்பீடு செய்தது. லால் குவான், கல்சினா, போஜ்பூர் மற்றும் அமிநகர் உர்ஃப் புர்பரல் வழியாக செல்லும் NE-3 வழியாக டெல்லி முதல் மீரட் வரையிலான நெடுஞ்சாலை வழித்தடமும் அதிவேக போக்குவரத்தில் மொபைல் அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் மதிப்பீடு செய்யப்பட்டது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) உபகரணங்கள் மற்றும் நிகழ்நேர சூழல்களில் தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளைப் பயன்படுத்தி சோதனைகள் நடத்தப்பட்டன. விரிவான அறிக்கை ட்ராய் வலைத்தளமான www.trai.gov.in-ல் கிடைக்கிறது. மேலும் தகவல்களுக்கு, ட்ராய் ஆலோசகர் (பிராந்திய அலுவலகம், தில்லி) திரு விவேக் கரே அவர்களை adv.ca@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது +91-11-20907772 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147772
***
AD/SM/DL
(Release ID: 2147959)