சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் - மத்திய அரசு
प्रविष्टि तिथि:
24 JUL 2025 3:57PM by PIB Chennai
பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் பருவநிலை மாற்றதால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
விவசாயம், எரிசக்தித் திறன், பசுமை இந்தியா உள்ளிட்ட 9 முக்கிய துறைகளில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேசிய தூய்மையான காற்றுத் திட்டத்தின் கீழ் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 130 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மத்திய மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இதற்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளும் என்றும் இதற்கென 13,036.52 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதாகவும அவர் கூறினார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் திட்டம் நடத்தப்பட்டு வருவதாக திரு கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147747
***
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2147835)
आगंतुक पटल : 6