ஜல்சக்தி அமைச்சகம்
ஒவ்வொரு இல்லத்திற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துதல்
Posted On:
24 JUL 2025 1:49PM by PIB Chennai
இந்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து ஆகஸ்ட் 2019 முதல், ஜல் ஜீவன் மிஷன் (JJM) – இல்லந்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் தொடக்கத்தில், 3.23 கோடி (16.7%) கிராமப்புற குடும்பங்கள் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தெரிவித்துள்ளபடி, 21.07.2025 நிலவரத்தின் அடிப்படையில், ஜல் ஜீவன் மிஷன் (JJM)- இல்லந்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 12.44 கோடி கூடுதல் கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 19.36 கோடி கிராமப்புற வீடுகளில், 15.67 கோடிக்கும் அதிகமான (80.94%) வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஜல் சக்தி துறைக்கான இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
***
(Release ID: 2147702)
AD/SM/KR
(Release ID: 2147760)