ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் சவால்களுக்கு தீர்வு காண மத்திய அரசின் குழாய் நீர் நண்பன் திட்டம்
Posted On:
24 JUL 2025 1:47PM by PIB Chennai
நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான ஜல் ஜீவன் இயக்கத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண குழாய் நீர் நண்பன் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது.
நாட்டின் ஊரகப் பகுதிகளில் மொத்தமுள்ள 19.36 கோடி குடும்பங்களில் 21.07.2025 நிலவரப்படி, 15.67 கோடி குடும்பங்களுக்கு (80.94%) குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத இலக்கை எட்டும் நோக்கத்துடன் இந்த இயக்கம் 2028 வரை நீட்டிக்கப்படும் என 2025-26 பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் அறிவித்தார். இந்த இயக்கத்தை அமல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாநில அரசுகளின் மூலதன முதலீட்டு திட்டங்களுக்கு வட்டியில்லாமல் 50 ஆண்டு காலத்திற்கு நிதி அமைச்சகத்தின் மூலம் கடன் வழங்க சிறப்பு உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநிலங்கள் சட்டப்படியான மற்றும் இதர அனுமதிகளை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த இணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில திட்ட நிர்வாக பிரிவுகள், மாவட்ட திட்ட அமலாக்க பிரிவுகள் ஆகியவற்றை அமைக்கவும், தொழில்நுட்ப ரீதியான திறன் கிடைப்பதில் உள்ள இடைவெளியை நிரப்பவும் உள்ளூர் அளவில் திறன்மிக்க நபர்கள் கிடைப்பதை உறுதிசெய்ய குழாய்நீர் நண்பன் திட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இயக்கத்தின் மூலம் நீர்நிலைகளை நிரப்பவும், ஆழ்குழாய் கிணறுகளை கட்டமைக்கவும், மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கவும், தற்போதுள்ள நீர்நிலைகளை புனரமைக்கவும், மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று எழுத்துமூலம் அளித்த பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147698
***
AD/SMB/AG/KR
(Release ID: 2147756)