கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச கூட்டுறவு ஆண்டு – விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு மத்திய கூட்டுறவு அமைச்சகம் ஏற்பாடு

Posted On: 23 JUL 2025 1:21PM by PIB Chennai

ஐ.நா. சபையின் சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2025 - ஐ நினைவுகூரும் வகையில் மத்திய கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு சிறப்பு முன்முயற்சிகள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது "கூட்டுறவு மூலம் சிறந்த உலகத்தைக் கட்டமைத்தல்" என்ற கருப்பொருளுடன், 2024 - ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச  மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளுடன் கூடிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் கூட்டுறவுத் துறையின் முக்கிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கூட்டுறவு ஆண்டு, 2025 - ஐ குறிக்கும் வகையில், கூட்டுறவுத் துறையின் அனைத்து தரப்பினருடன் இணைந்து விரிவான வருடாந்திர செயல் திட்டத்தை கூட்டுறவு அமைச்சகம் வடிவமைக்கப்பட்டு, அத்துறைக்கான மத்திய அமைச்சரால் 2025 - ம் ஆண்டு ஜனவரி 25 - ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் செயலாக்க நடவடிக்கைகளுக்காக, கூட்டுறவு அமைச்சகம் சர்வதேச கூட்டுறவு ஆண்டு - தேசிய கூட்டுறவு குழு, சர்வதேச கூட்டுறவு ஆண்டு - தேசிய அமலாக்கக் குழு மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆண்டு - மாநில அளவிலான உயர்நிலைக் குழுக்களை அமைத்தது. மேலும், இதற்கான நடைமுறைகள் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டுறவு மேம்பாட்டுக் குழுக்களின் குறிப்பு விதிமுறைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து நாடு முழுவதும் விரிவான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பட்டுகள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச கூட்டுறவு ஆண்டையொட்டி அதற்கான இலச்சினை, இந்திய ரயில்வேயின் மின்னணு டிக்கெட்டுகள், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் / துறைகள் / பொதுத்துறை நிறுவனங்களின் கடிதப் போக்குவரத்து மற்றும் அமுல் நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகள் உட்பட கூட்டுறவு தயாரிப்பு பேக்கேஜிங் ஆகியவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்பது அலைவரிசைகளிளும் ஒளிபரப்பப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025 - ன் அனைத்து போட்டிகளிலும் இந்த இலச்சினை காட்சிப்படுத்தபட்டுள்ளது.

பீகாரில் 62,500 மெட்ரிக் டன் சேமிப்பு திறன் கொண்ட 25 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சநகங்களின் கிடங்குகளுக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். மத்தியப் பிரதேச மாநில அரசு ஏப்ரல் மாதத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் மாநில அளவிலான மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனத்தின் கலோல் கிளையின் பொன்விழா கொண்டாட்டங்கள்   மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.  மேலும் பீஜ் அனுசந்தன் மையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

தேசிய அளவில் ஒரு முக்கிய முயற்சியாக, ஜூன் 30 - ம் தேதி புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைமையில் மாநில கூட்டுறவு அமைச்சர்களின் தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. நாட்டின் முதலாவது கூட்டுறவு பல்கலைக்கழகமான "திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழகத்தின்" கட்டுமானப் பணிகளுக்கு 05.07.2025 அன்று குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து ஜூலை 06 - ம் தேதி மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் 4-வது நிறுவன தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2147173

***

(Release ID: 2147173)

VL/SV/KPG/KR


(Release ID: 2147378)
Read this release in: English , Urdu , Hindi