சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுகாதாரச் சேவைகளை மக்கள் அணுகுதல், சேவைகள் கிடைத்தல் மற்றும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கான அரசின் முன்முயற்சிகள்

Posted On: 22 JUL 2025 4:20PM by PIB Chennai

மருத்துவமனை சான்றுகள், பங்குதாரர்களின் பின்னூட்டம் மற்றும் மக்களின் புதிய சுகாதாரத் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆயுஷ்மான் பாரத் பிஎம்-மக்கள் நலத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகின்றது. இந்த முயற்சிகளின் பலனாக இப்போது 1961 சிகிச்சை முறைகளும் 27 மருத்துவ சிறப்பு சிகிச்சைகளும் இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைகளும் சேவைகளும் தரமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு ஒரு விரிவானக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

நாட்டில் 30.6.2025 நிலவரப்படி மொத்தமாக 1,77,906 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் ஆகியவை ஆரோக்கிய மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கிய மந்திர்கள் முன் தடுப்பு, மறுவாழ்வு, மேம்பாடு மற்றும் குணமளிக்கும் சிகிச்சைகள் ஆகியவற்றை வழங்குகின்றன.

இலவச சேவைகள் திட்டத்தின்கீழ் எஸ்.ஹெச்.சி-ஏஏஎம்களில் 106 அத்தியாவசிய மருந்துகளும் 14 நோயறிதல் சோதனைகளும் அதேபோல் பி.ஹெச்.சி.-ஏஏஎம்களில் 172 மருந்துகளும் 63 பரிசோதனைகளும்  கிடைக்கின்றன

மருத்துவர்கள் கிராமம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணியாற்ற முன்வருவதை ஊக்குவிக்கும் வகையில் தேசிய சுகாதார இயக்கம் ஊக்கத்தொகை மற்றும் மதிப்பூதியம் ஆகியவற்றை வழங்குகிறது.

இத்தகவலை சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர். திரு பிரதாப்ராவ் ஜாதவ் (22 ஜூலை 2025) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்தார்.

***

AD/TS/DL


(Release ID: 2146982)
Read this release in: English , Urdu , Hindi