அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
புதிதாக அமைக்கப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்
Posted On:
15 JUL 2025 5:14PM by PIB Chennai
ஹரியானா மாநிலம், ஃபரீதாபாதில் இயங்கிவரும் சுகாதார அறிவியல் தொழில்நுட்ப செயல்பாட்டு நிறுவனத்திற்கு (டிஎச்எஸ்டிஐ) சென்ற மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அங்கு உருவாக்கப்பட்டு வரும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பணிகளை ஆய்வு செய்தார்.
உயிரி தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான டிஎச்எஸ்டிஐ, மருத்துவ ஆராய்ச்சி மையத்தை நிறுவும் பணியை மேற்கொண்டு வருகிறது. இது குடல்நோய் தொற்று, சுவாச நோய் தொற்று குறித்து தனித்தனி பிரிவுகளுடன் மேம்பட்ட மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் வசதி கொண்டதாகும்.
இந்த ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களை பார்வையிட்டதுடன், மருத்துவ உபகரணங்களை நிறுவுவதையும் செயல்பாட்டு தயார் நிலை குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், பொது சுகாதார கண்டுபிடிப்புகளுக்கு, “டிஎச்எஸ்டிஐ” சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்தால் தாம் ஈர்க்கப்படுவதாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், உலக பயன்பாட்டிற்கும் இடையிலான இடைவெளியை ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வாறு குறைக்க முடியும் என்பதை “டிஎச்எஸ்டிஐ” எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்காலத்தின் போது தடுப்பூசி உருவாக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு ஆய்வுகளில் “டிஎச்எஸ்டிஐ” -ஐ முக்கிய பங்காற்றியதாகவும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144891
***
AD/TS/SM/GK/AG/DL
(Release ID: 2144975)
Visitor Counter : 2