விவசாயத்துறை அமைச்சகம்
நடப்பாண்டு கரீஃப் பருவ காலத்தில் பயிர் விதைப்பு 597.86 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு
Posted On:
14 JUL 2025 6:35PM by PIB Chennai
நடப்பாண்டு கரீஃப் பருவத்தில் 11.07.2025 வரையிலான காலகட்டத்தில் பயிர் விதைப்பு பரப்பளவு குறித்த புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மொத்த பயிர்கள் விதைப்பு பரப்பளவு 37.27 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 560.59 லட்சம் ஹெக்டேரில் பயிர்கள் நடவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு அது 597.86 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. நெல் விதைப்பு கடந்த ஆண்டில் 111.85 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இந்த ஆண்டு அது 123.68 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகளின் பயிர் விதைப்பு கடந்த ஆண்டு 53.39 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 67.09 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. சிறுதானியங்கள் 116.30 லட்சம் ஹெக்டேரிலும் (கடந்த ஆண்டு 99.78 லட்சம் ஹெக்டேர்), எண்ணெய் வித்துக்கள் 137.27 லட்சம் ஹெக்டேரிலும் (கடந்த ஆண்டு 139.82 லட்சம் ஹெக்டேர்), கரும்பு 55.16 லட்சம் ஹெக்டேரிலும் (கடந்த ஆண்டு 54.88 லட்சம் ஹெக்டேர்) பயிரிடப்பட்டுள்ளன. சணல் 5.53 லட்சம் ஹெக்டேரிலும் (கடந்த ஆண்டு 5.65 லட்சம் ஹெக்டேர்), பருத்தி 92.83 லட்சம் ஹெக்டேரிலும் (கடந்த ஆண்டு 95.22 லட்சம் ஹெக்டேர்) பயிரிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2144621
***
(Release ID: 2144621)
AD/RB/DL
(Release ID: 2144671)