மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
முதல் முறையாக சர்வதேச அரங்குகளுடன் செமிகான் இந்தியா 2025:
டிஜிட்டல் பயன்பாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் நவீனத் தொழில்நுட்பங்களில் உலகின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது
Posted On:
11 JUL 2025 1:22PM by PIB Chennai
டிஜிட்டல் வளர்ச்சியில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும் வகையிலும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் உலக நாடுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியா உலகளவில் சிப் உற்பத்தியில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் நாடாக உருவெடுத்து வருகிறது. இதன் பின்னணியில், செமிகான் இந்தியா, 2025 - கருத்தரங்கு நாட்டின் நோக்கத்தை மட்டுமின்றி, தற்சார்பு, நம்பிக்கை, உலகளவிலானப் போட்டித்தன்மை கொண்ட குறைக்கடத்தி உற்பத்திக்கானச் சூழல் அமைப்பை உருவாக்குவது குறித்த வளர்ந்து வரும் திறனையும் வெளிப்படுத்த ஒரு முக்கிய தளமாக உருவெடுத்து வருகிறது. உற்பத்தியை அதிகரிப்பது, புதுமை, புதிய உத்திகளுடன் கூடிய ஒத்துழைப்பு போன்ற அம்சங்களுடன், 2024 - ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்தாண்டும் நடத்தப்படுகிறது. இது தற்சார்பு இந்தியா இயக்கத்தின் தேசிய அளவிலான தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்திய செமிகண்டக்டர் இயக்கமானது செமிகான் அமைப்புடன் இணைந்து செப்டம்பர் 2 - ம் தேதி முதல் 4 - ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள யசோபூமியில் (இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையம்) இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் எனப்படும் நுண்ணிய மின்னணு சாதனங்கள், குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்கள் மற்றும் லட்சியங்களை வெளிப்படுத்தும் வகையில் அமையும்.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய செமிகண்டக்டர் இயக்கம், செமிகான் இந்தியா, 2025 ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன. இது கொள்கை, தொழில், கல்வி மற்றும் முதலீடு ஆகியத் துறைகளில் உலகளவில் மற்றும் உள்நாட்டுப் பங்குதாரர்களை ஒன்றிணைக்கும் உயர் தளமாக செயல்படும்.
இந்தக் கருத்தரங்கின் முக்கிய சிறப்பம்சங்கள்:
முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற கருத்தரங்கங்களுடன் ஒப்பிடுகையில், செமிகான் இந்தியா, 2025 - கருத்தரங்கமானது வளர்ந்து வரும், நம்பகத்தன்மையுடன் கூடிய குறைக்கடத்தி உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருவதையும், உலகளவில் குறைக்கடத்தி சிப் பயன்படுத்தும் நிறுவனங்களை ஈர்ப்பதில் செமிகான் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளையும் பிரதிபலிக்கிறது.
முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற கண்காட்சிகளில் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக, இந்தக் கண்காட்சியில் ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து நான்கு சர்வதேச அரங்குகள் இடம் பெறுகிறது. நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்தியா மற்றும் முக்கிய நட்பு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களை ஒன்றிணைக்கும் வகையில் எட்டு நாடுகள் பங்கேற்கும் வட்டமேசை மாநாடும் முதன்முறையாக நடைபெறவுள்ளது.
திறன் மேம்பாடு, எதிர்காலத்திற்குத் தேவையான தொழில்நுட்பத் தயார்நிலை ஆகிய அம்சங்களில் வலுவான செயல்பாடுகள், மாணவர்கள், பொறியாளர்களுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, பணியாளர் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவை முதன்முறையாக இதில் அறிமுகப்படுத்தப்படும். இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வழிநடத்துவதும், அவர்களுக்கு தொழில் ஆலோசனைகளை வழங்குவதும் இதில் அடங்கும். இந்த கருத்தங்கில் பிரத்யேக குறைக்கடத்தி வடிவமைப்பு தொடக்க அரங்கமும் இடம்பெறும். இது புதுமை சிப் வடிவமைப்பு நிறுவனங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. கூடுதலாக, இந்த ஆண்டு ஒன்பது மாநில அரசுகளின் அரங்குகள் இடம் பெறுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2143965
**
(Release ID: 2143965)
AD/TS/SV/KPG/KR/DL
(Release ID: 2144084)