சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் 20 படிப்புகளை வழங்குகிறது
Posted On:
11 JUL 2025 5:58PM by PIB Chennai
புதுவைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்குநரகத்தால் மொத்தம் 20 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில் 8 எம்பிஏ மேலாண்மை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் சந்தைப்படுத்தல், நிதி, மனித வள மேலாண்மை, சர்வதேச வணிகம், பொது மேலாண்மை, சுற்றுலா செயல்பாடுகள், விநியோகச் சங்கிலி மேலாண்மை, மருத்துவமனை மேலாண்மை ஆகியவை அடங்கும். இது தவிர 4 முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளன. அவற்றில் எம்ஏ – ஆங்கிலம், ஹிந்தி, சமூகவியல், எம்காம் (நிதி) ஆகியவை அடங்கும். இது தவிர 8 இளநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் பிபிஏ, பிகாம் ஆகிய பட்டங்களும், பிஏ-வில் ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவையும் அடங்கும். இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பட்டப் படிப்புகளும் புதுதில்லி பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைதூரக் கல்வி அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டவையாகும்.
2025-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசித் தேதி 2025 ஆகஸ்ட் 31 ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://dde.pondiuni.edu.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் விளக்கங்களுக்கு, பல்கலைக்கழகத்தின் உதவி மையத்தை 0413-2654439 என்ற எண்ணிலோ அல்லது ddehelpdesk@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
***
AD/SG
(Release ID: 2144072)