சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
குஜராத்தில் மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
Posted On:
11 JUL 2025 3:06PM by PIB Chennai
குஜராத்தின் கெவாடியாவில் "மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ள இரண்டு நாள் மாநாட்டை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேற்று (ஜூலை 10) தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு பங்கேற்றுள்ளார்.

இந்த மாநாட்டில் யுஜிசி தலைவர் மற்றும் உயர்கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி தொடக்க உரை நிகழ்த்தினார்.
இந்தியா முழுவதும் உள்ள முன்னணி மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வி அமைச்சக அதிகாரிகள், யுஜிசி உயர் அதிகாரிகள், கல்வித் தலைவர்கள் மற்றும் கொள்கை வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

“வளர்ச்சியடைந்த பாரதம் @2047” என்ற நோக்கத்தின் கீழ் கல்வி மாற்றத்தின் உந்துசக்திகளாக மத்திய பல்கலைக்கழகங்கள் வகிக்கும் பங்கு, உயர்கல்விக் கொள்கை, நிறுவன நிர்வாகம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தேசிய மேம்பாட்டு முன்னுரிமைகள் ஆகிய தலைப்புகளை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்தியாவில் உயர்கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திறம்பட செயல்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கு இந்த மாநாடு ஒரு முக்கிய தளமாக அமைந்தது.
***
AD/GK/AG/SG
(Release ID: 2143999)