மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
பன்மொழி டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் பாஷினி பிரிவுடன் புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
Posted On:
09 JUL 2025 10:04PM by PIB Chennai

பன்மொழி டிஜிட்டல் உள்ளடக்கத்தை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவுடன், புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது மொழி சார்ந்த தொழில்நுட்ப உதவியுடன் மக்களிடையே மொழி குறித்த புரிதலை மேம்படுத்தவும் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகள் தொடங்கி, இதர பிராந்தியத்தில் உள்ள இந்திய மொழிகளுக்கும் விரிவடைய வழிவகுக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுச்சேரி அரசின் நிர்வாக நடைமுறைகளில் மாற்றத்தை உருவாக்கும். பாஷினி என்ற மொழி தொழில்நுட்பம் நிர்வாக சூழலை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தாய்மொழியில் டிஜிட்டல் சேவைகளை தடையின்றி வழங்க ஏதுவாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
கடந்த ஜூலை 8-ம் தேதி புதுச்சேரியில் உள்ள அக்கார்டு விடுதியில், நடைபெற்ற விழாவில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
* புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன்,
* புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு எம்ப்ளம் ஆர். செல்வம்,
* புதுச்சேரி அரசுத் தலைமைச் செயலாளர் டாக்டர் ஷரத் சவுகான்,
* புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் திருமதி ஏ. முத்தம்மா
* புதுச்சேரி தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குநர் திரு சிவராஜ் மீனா
* புதுச்சேரி டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவு தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப் நாக்
* புதுச்சேரி அரசு டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த முன்முயற்சி, நிர்வாக நடைமுறைகளை உள்ளடக்கியதாகவும், குரல் வாயிலாக தட்டச்சு செய்யும் திறன் பெற்றதும், மக்களை மையமாகக் கொண்ட எளிதில் பயன்படுத்தக் கூடியதாகவும், இந்தப் பாஷினி செயலி அமைந்துள்ளது. அதே சமயத்தில் மொழி தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் புதுச்சேரியின் வளமான மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
"பாஷினி பிரிவுடனான இந்த ஒத்துழைப்பு புதுச்சேரி டிஜிட்டல் நிர்வாகப் பயணத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும். மொழிகளால் ஏற்படும் தடைகளை களைவதன் மூலம், புதுச்சேரியில் உள்ள மக்கள் அனைவரும் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில், அவரவர் விரும்பும் மொழிகளில் அரசின் சேவைகளை எளிதில் அணுக வகை செய்கிறது. இந்த முயற்சி டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் திரு. எம்ப்ளம் ஆர். செல்வம், பிரதமரின் தலைமையிலான டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் வாயிலாக யுபிஐ, டிஜிட்டல் வங்கி, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவை மக்களுக்கான அரசின் சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக, பாஷினி செயலி மூலம் மக்கள் தங்கள் தாய் மொழியில் பல்வேறு டிஜிட்டல் தளங்களுடன் தொடர்பு கொள்ள உதவுகிறது. பன்மொழி தொழில்நுட்பத்தை டிஜிட்டல் வங்கியுடன் ஒருங்கிணைப்பது ஒவ்வொரு குடிமகனுக்கும், குறிப்பாக மொழியியல் ரீதியாக வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க உதவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டிஜிட்டல் இந்தியா பாஷினி பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் நாக், "புதுச்சேரியுடனான இந்த ஒத்துழைப்பு மொழியியல் ரீதியாக டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகக் கூறினார். டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் உண்மையான பன்மொழி டிஜிட்டல் சூழல் அமைப்பிற்கான வலுவான அடித்தளம் அமைக்கவும் உதவிடும் என்று அவர் கூறினார்.
***
AD/SV/KPG/KR/DL
(Release ID: 2143751)
Visitor Counter : 3