புவி அறிவியல் அமைச்சகம்
“வானிலை இயக்கம்” திட்டத்தின் கீழ், இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பு அமைப்புமுறை உலகளவில் சிறந்த தரத்தை எட்ட கணிசமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
01 JUL 2025 6:41PM by PIB Chennai
கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த ஊடகக் கேள்விகளுக்குப் பதிலளித்த மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் “வானிலை இயக்கம்” திட்டத்தின் கீழ், இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பு முறை உலகளவில் சிறந்த தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
இந்தியாவின் பழமையான இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி)முன்னறிவிப்பு மையங்களில் ஒன்று சிம்லாவில் உள்ளது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நிகழ்நேர வானிலை முன்னறிவிப்பை அதிகரிக்க, தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் டாப்ளர் ரேடார்களை சேர்ப்பது குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் விரிவாகக் கூறினார். "மேக வெடிப்புகள் திடீரென ஏற்படுவதால், அவற்றின் தன்மை காரணமாக முன்கூட்டியே அறிவிப்பது கடினம் என்றாலும், நெடுங்காலம் (30 நாட்கள்), குறுகிய காலம் (3 நாட்கள்) மற்றும் நவ்காஸ்ட் (3 மணிநேரம்) போன்ற இலக்கு முன்னறிவிப்புகளுடன் நமது அமைப்புமுறை மேம்பட்டு வருகிறது," என்று அவர் கூறினார்.
மும்பை போன்ற கனமழை பெய்யும் இடங்களில் உள்ள மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடையை எடுத்துச் செல்லலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதற்கு முன்பு தங்கள் செல்பேசியில் ஐஎம்டியின் புலனம் (வாட்ஸ்அப்) பக்கத்தைப் பார்க்கும் வகையில், நமது முன்னறிவிப்பு அமைப்புமுறை மிகவும் துல்லியமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். விவசாயிகள் மற்றும் விவசாயிகளுக்கான பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு பயன்பாடுகள் குறித்தும் அவர் பேசினார்.
வானிலை முன்னறிவிப்பு துல்லியமாக இருந்தாலும் கூட, கனமழை அல்லது திடீர் வெள்ளத்திற்குப் பிறகு ஏற்படும் சேதம், பாதிக்கப்பட்ட இடம் அல்லது வாழ்விடத்தின் பாதிப்பைத் தீர்மானிக்கும் உள்ளூர் காரணிகளைப் பொறுத்து சில நேரங்களில் மாறுபடும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
நமது வானிலை முன்னறிவிப்பு உள்ளீடுகள் அண்டை நாடுகளாலும் பெறப்படுகின்றன, இது அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141315
***
AD/RB/DL
(Release ID: 2141401)
Visitor Counter : 11